வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை.., அலெர்ட்டா இருந்துக்கோங்க மக்களே!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜனவரி 4ஆம் தேதி வரை மழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
களஞ்சியம் மொபைல் ஆப் 2025: அரசு ஊழியர்கள் இனி ஈஸியா லீவு எடுக்கலாம்.., புத்தாண்டுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு!!
மேலும், தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னையை பொறுத்தவரை இன்று வெயில் காணப்பட்டாலும், இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?
மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?
TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!
PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!
அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!