தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பது வரலாற்றிலயே இதுவே முதல் முறை. இதனால் மக்கள் வெளியே வரவே பயப்படும் நிலையில், தற்போது மக்களுக்கு குளிரூட்டும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் முக்கிய ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனத்த மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் வழக்கம் போல் கடலுக்குள் செல்லலாம் என தெரிவித்துள்ளது.