தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து ஓரிரு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை அடுத்த வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புடவை(சேலை) கட்டினால் புற்றுநோய் வருமா? என்னடா சொல்றீங்க? வெளியான அதிர்ச்சி தகவல்!
அதுமட்டுமின்றி தெற்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் சென்னை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு