Breaking News: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்து இப்பொழுது வரவு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் இன்று (19.07.2024) ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: மதுரை தத்தனேரி மயானத்தில் எரியூட்டும் பணி நிறுத்தம் – மாநகராட்சி அறிவிப்பு!!
மேலும் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்
பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல்
கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து