தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காலை வெயில் அடித்தாலும் கூட மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு
இதனை தொடர்ந்து சென்னை வானிலை மையம் பகல் 1 மணிக்குள் கனமழை பெய்ய இருக்கும் 9 மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை அடுத்த வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
18 வயது நிரம்பியவர்களா நீங்கள் – இனி வீட்டில் இருந்தே ஓட்டுநர் உரிமம் பெறலாம் – எப்படி தெரியுமா?
அதே போல் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11ம் தேதி) பகல் 1 மணிக்குள் , சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் 2 செ.மீ. மழை பெய்து உள்ளது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?