தமிழகத்தில் வருகிற ஜன.1ம் தேதி வரை கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்:
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, தென் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை குறைந்த பாடில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்தது.
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர – வட தமிழக கடலோர பகுதிகளில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து, காலை 8.30 மணியளவில் மேலும் வழுவிழந்தது.
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி.., முதல் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி!!
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். அதுமட்டுமின்றி, டிச.31 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!