தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கியதில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலை சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தற்போது தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலின் மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
எனவே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் தீபாவளி வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அன்று முதல் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதி வரை கனமழை பெய்ய கூடும்.
கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன் – இப்போது எப்படி உள்ளார்?
குறிப்பாக நவம்பர் 1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு, மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், நாமக்கல், கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு