கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெயிலின் சூட்டை குளிரூட்டும் விதமாக ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் மழை பெய்ய இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் 23ம் தேதி வறண்ட வானிலை நிலவ கூடும். அதுமட்டுமின்றி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வானிலை மாற்றம் இல்லாததால் கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.