Home » செய்திகள் » தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்:

இந்த ஆண்டு 2024 டிசம்பர் மாதம் ஆரம்பித்ததில் இருந்து, சென்னையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால் சென்னையில் பெரிதாக கனமழை பெய்ய வில்லை. குறிப்பாக காலை நேரத்தில் குளிரான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  

தற்போது கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும். குறிப்பாக இன்றும் மற்றும் நாளை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய காலதாமதம் ஆகிறது.

இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. இம்மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிக்கப்படுகிறது. மேலும், கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிமீ வரை வீசலாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, கடலோர மாவட்டங்களில்  டிசம்பர் 20 முதல் கனமழை குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

விஜய்யின் TVKவில் இணைந்த 100 மூதாட்டிகள்… அதிக வரவேற்பு கொடுத்த இளைஞர்கள்..!

தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் – எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  – வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top