அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

தற்போது அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Tamil Nadu and Puducherry Heavy rain

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் மழை பெய்யும் என்றும், மேலும் செப்டம்பர் 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு – இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. Chennai Meteorological Center

அத்துடன் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *