
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் காலையில் வெயில் அடித்தாலும், மாலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை – உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, நீலகிரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல் – சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!
அதே போல் நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 9 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை