தற்போது நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி போதைப் பொருள்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ?
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை :
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரும் வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வந்தது. இந்த நிலையில்,
இன்று மத்திய மற்றும் மாநில வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, கூல் லிப் போன்ற போதைப் பொருள்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
போதைப் பொருட்கள் பயன்பாடு :
இந்நிலையில் அவர், ‘தமிழ்நாட்டில் கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த ஏராளமான வழக்குகளில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அத்துடன் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பது தெரிய வருகிறது. cool lip
குறிப்பாக தமிழ்நாட்டில், கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் இது அனுமதிக்கப்படுகிறது. மேலும் அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து ஜிஎஸ்டி வரியே வசூலிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சமீப காலமாக பள்ளி மாணவர்கள் சண்டையிட்டு கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க, இது போன்ற போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து – உரிமையாளர் கைது !
கூல் லிப்புக்கு ஏன் தடை விதிக்க கூடாது :
இதனை தொடர்ந்து போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவித்து, அத்துடன் அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது?.
மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு இந்த விஷயத்தை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.