தற்போது அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் இதை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்கள் :
இந்தியாவில் பார்ச்சூன் இந்தியா என்ற அமைப்பு தற்போது 2023 – 2024 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
சினிமா பிரபலங்கள் :
மும்பை பாலிவுட் பிரபலங்களில் அதிக வரி செலுத்தியோர் பட்டியலில் நடிகர் ஷாருக் கான் 92 கோடி ரூபாய் செலுத்தி முதலிடத்தில் உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 80 கோடி ரூபாய் செலுத்தி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர்களான சல்மான் கான் – 75 கோடி ரூபாய்
அமிதாப் பச்சன் – 71 கோடி ரூபாய்
அஜய் தேவ்கன் – 42 கோடி ரூபாய்
ரன்பீர் கபூர் – 36 கோடி ரூபாய்
ஹ்ரித்திக் ரோஷன் – 28 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திஉள்ளனர்.
நடிகர் கபில் சர்மா – 26 கோடி ரூபாய்,
நடிகை கரீனா கபூர் – 20 கோடி ரூபாய்,
நடிகர் ஷாஹித் கபூர் – 14 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளனர்.
மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா 14 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திஉள்ளனர்.
பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் – அரசு கொண்டு வந்த சூப்பரான திட்டம் – எப்படி பெறுவது?
கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் :
பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார்.
முன்னாள் இந்திய வீரர்களான மகேந்திர சிங் தோனி – 38 கோடி ரூபாய்,
சச்சின் டெண்டுல்கர் – 28 கோடி ரூபாய்,
சவுரவ் கங்குலி – 23 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.