Kelambakkam Special Bus: விடுமுறை ஸ்பெஷல் 1190 சிறப்பு பேருந்து இயக்கம். பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது முக்கிய பண்டிகையிலிலோ வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
விடுமுறை ஸ்பெஷல் 1190 சிறப்பு பேருந்து இயக்கம்
அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் வெளியூரில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக கூடுதல் பஸ் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி தமிழகத்தில் உள்ள சென்னையிலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.08.2024) ! காலை 9 am அவுட் – மாலை 4 pm இன் உஷார் மக்களே !
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, ஈரோடு, கன்னியாகுமரி, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி 470 பேருந்துகளும் மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதி 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பெங்களூர், ஓசூர், திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 17ம் தேதி 65 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி கோவை, பெங்களூர், திருப்பூா், ஈரோடு ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது August 15.
யானைகள் பற்றிய சில முக்கியமான தகவல்கள்
ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர்
முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு – என்னன்னு தெரியுமா?
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்