தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு லீவு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம்:
பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு லீவு என்ற அறிவிப்பை கேட்டாலே போதும் குதூகலத்தில் குதிக்க தொடங்கி விடுவார்கள். தற்போது கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாகை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த தர்காவில் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2024ல் 468-வது பெரிய கந்தூரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு!
மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 11ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு வருகிற , 12ம் தேதி நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் 21ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்