பேட்மேனாக நடித்த ஹாலிவுட் நடிகர் கில்மர் காலமானார்:
பேட்மேனாக நடித்த ஹாலிவுட் நடிகர் கில்மர் காலமானார்: தற்போது தொண்டை புற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வால் கில்மர் சமீபத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
வால் கில்மர் திரை வாழ்கை:
வால் கில்மர் 1984ம் ஆண்டு வெளியான டாப் சீக்ரெட் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து டாப் கன், கில் மி அகைன், தி டோர்ஸ், டாம்ப்ஸ்டோன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், 1995ம் ஆண்டு வெளியான பேட்மேன் ஃபாரெவர் படத்தில் பேட்மேனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
கேங்கர்ஸ் – அதிகாரப்பூர்வ டிரெய்லர் | சுந்தர் சி | வடிவேலு | கேத்தரின் தெரசா | சி.சத்யா
ரெட் பிளானட், வொண்டர்லேண்ட், ஸ்பார்டன், அலெக்ஸாண்டர், லவ் குரு, தி ஸ்னோமேன், டாப் கன் மேவரிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து கடைசியாக டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் மேவரிக் படத்துக்கு பிறகு இவர் உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் நடிக்கவில்லை ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.