ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது
ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது: தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்றவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளை கொண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அதன் பானங்களின் பெயரை ‘Health Drinks’ இருந்து ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் எனப் பெயரை பதித்து விற்பனை செய்து வருகிறது. சொல்ல போனால் ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்பது புரதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை பூர்த்தி செய்ய உதவும் பானங்களாகும்.
பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!!
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) ஒரு விசாரணையை அனுப்பியது. இதன் விளைவாக ஹார்லிக்ஸ் பானத்தில் இருந்து ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கு முன்னர் போர்ன்விட்டா வில் இருந்து பெயரை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தவறான சொற்களை லேபிள்களில் பயன்படுத்துவதன் மூலம் விளைவு பெரியதாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!