வசூலை வாரி குவிக்கும் பேய் படங்கள் 2024 ! 2K கிட்ஸ்ன் மனதை வென்ற காதலுடன் இணைந்த ஹரார் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் !வசூலை வாரி குவிக்கும் பேய் படங்கள் 2024 ! 2K கிட்ஸ்ன் மனதை வென்ற காதலுடன் இணைந்த ஹரார் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் !

தற்போதைய தமிழ் சினிமாவில் வசூலை வாரி குவிக்கும் பேய் படங்கள் 2024. 2k கிட்ஸ் காலத்தில் சினிமாவில் காதல் மற்றும் பேய் ஜார்னரில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவையாக உள்ளன. அவை தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூலை வாரி குவிக்கின்றன.

சினிமாவின் தொடக்க காலத்தில் பாடல்கள், வசனங்கள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்பட்டன. நாளடைவில் ஆக்சன், காதல், திரில்லர், பேய், செண்டிமெண்ட், டைம் ட்ராவல், புராண கதைகள், ஹிஸ்டாரிக் மூவி, பயோகிராபி மூவி போன்ற பல ஜார்னரில் படங்கள் வெளிவர ஆரம்பித்தது. இந்த வகை படங்கள் மத்தியில் காதல் மற்றும் பேய் ஜார்னரில் வெளிவரும் படங்கள் தான் எல்லா காலத்திலும் அனைவராலும் விரும்பி பார்ப்பவையாக உள்ளன.

தற்போது விஜய், அஜித் , விக்ரம், சூர்யா என சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகர்கள் அனைவரும் ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான். அதே போல் இந்த 2k கிட்ஸ் காலத்திலும் வித்தியாசமான காதல் படங்கள் வெற்றி பெறுவதும், அவற்றில் நடிக்கும் புதுமுக நடிகர்கள் கவனிக்கப்பட்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெறுவதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் தற்சமயம் வெளியான லவ் டுடே, டாடா, குட் நைட், லவ்வர், ரோமியோ போன்ற ட்ரெண்டிங் காதல் படங்களும் ரசிகர்களிடையே பல மடங்கு வசூலை பெற்று தந்தன. அதில் நடித்த புதுமுகங்களும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றனர்.

காதல் படங்கள் ஒரு புறம் என்றால் பேய் படங்களும் அதற்கு இணையாக வசூலை வாரி குவிக்கின்றன. தமிழ் திரையுலகில் சந்திரமுகி, அருந்ததி படங்களின் வெற்றியை தொடர்ந்து பேய் படங்களின் சீசன் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.

பாராட்டு விழாவில் அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய் – அப்படி என்னென்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

உதாரணமாக அரண்மனை, முனி, காஞ்சனா, பீட்ஸா, டார்லிங், இருட்டு, தில்லுக்கு துட்டு, டிமாண்டி காலனி போன்ற பல பேய் ஜார்னர் படங்கள் வெளிவந்தன. இதில் சில படங்கள் தொடர் பாகங்களாக வெளி வருகிறது. காஞ்சனா மற்றும் அரண்மனை படங்கள் தொடர்ந்து 4 பாகங்கள் வரை எடுக்கப்பட்டு விட்டன.

தற்போது வெளிவந்த அரண்மனை -4 சுமார் 30 கோடி செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் இது 100 கோடிக்கு மேல் வசூலித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. இதே போல் அரண்மனை -5 ம் பாகம், காஞ்சனா -4 ம் பாகம், டிமாண்டி காலனி -2 ம் பாகம் போன்ற படங்கள் விரைவில் படமாக்க உள்ளனர்.

Join WhatsApp Group

அதனால் பொழுது போக்கு நிச்சயம் என்று ரசிகர்களும், வசூல் உறுதி என்று விநியோகஸ்தர்களும் நம்புவதால் காதல் மற்றும் பேய் படங்கள் இந்த 2k கிட்ஸ் காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *