இன்று ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து எங்கள் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் தீ விபத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டாடா மின்னணு தொழிற்சாலை :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான மின்னணு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மூன்று ஷிப்ட்களின் அடிப்படையில் 24 மணி நேரமும் ஆலை செயல்பட்டு வருகிறது.
அத்துடன் சுழற்சி முறையில் ஷிப்ட் ஒன்றுக்கு சுமார் 1500 முதல் 2000 பணியாளர்கள் பணியாற்றி வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து :
இந்நிலையில் இன்று (28.09.2024) காலை எதிர்பாராத விதமாக டாடா மின்னணு தொழிற்சாலையில் தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அதன் பின்னர் தீயானது தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதியில் பரவியதால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இதனையடுத்து இது குறித்து ஓசூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டாடா மின்னணு நிறுவனம் விளக்கம் :
இந்நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக தற்போது டாடா மின்னணு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அந்த வகையில் ஓசூரில் உள்ள எங்களது உற்பத்தி ஆலையில் துரதிஷ்ட வசமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துடன் உற்பத்தி ஆலையில் பின்பற்ற படும் எங்களின் அவசர கால நெறிமுறைகள் மற்றும் இதனையடுத்து எங்களின் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாய் உறுதி செய்திருக்கின்றன.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024) ! 40 தொழிலாளர்களின் நிலை என்ன ?
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து எங்கள் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று டாடா மின்னணு நிறுவனம் தெரிவித்துள்ளது.