மத்திய அரசின் சூப்பர் திட்டம்
இந்தியாவில் வாழும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா” திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு தவணையாக ரூ.11,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் விண்ணப்பிப்பதன் மூலம் அவர்கள் கருவுற்றது முதல் குழந்தை பிறக்கும் வரை 3 தவணைகளில் நிதி வழங்கப்படும். அதுமட்டுமின்றி இலவச மருந்துகள் மற்றும் கர்ப்ப காலத்திற்கு முன், பின் மேற்கொள்ளும் பரிசோதனை ஆகிய வசதிகளும் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் சேர கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் https://pmmvy.wcd.gov.in என்ற சமூக வலைத்தளத்துக்கு சென்று, குடிமகன் உள்நுழைவு என்ற விருப்பத்தை க்ளிக் செய்யவும். இதையடுத்து ஒரு புதிய பக்கம் திரையில் தெரியும். அதில் உங்களுடைய போன் நம்பரை கொடுத்தால் ஒரு படிவம் திறக்கப்படும். இதனை தொடர்ந்து அதில் கேட்கப்படும் விவரங்களை அளித்து அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் சமர்ப்பி என்ற பட்டனை க்ளிக் செய்த பின்னர் உங்களுக்கு ஒரு பதிவு எண் கிடைக்கும். இதையடுத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு நிதி உதவி உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:
- கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை
- முகவரி சான்றிதழ்,
- வருமான சான்றிதழ்
- குழந்தை பிறப்பு சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- பான் கார்டு
- வாங்கி கணக்கு புத்தகம்
- மொபைல் எண்
குழந்தையாக இருக்கும் போதே பாலியல் தொல்லை.., பேபி வந்ததும் மன்னிப்பு கேட்ட நபர்.., பிரபல நடிகை வேதனை!
குறிப்பாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நினைக்கும் கர்ப்பிணி பெண் வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.