இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி? அட ரொம்ப ஈஸிங்க!இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி? அட ரொம்ப ஈஸிங்க!

இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி: இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவது பெறுவது என்பது மிகவும் எளிதான விஷயமாக மாறிவிட்டது.

ஆனால் பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு இணைய சேவை என்பது கட்டாயம் தேவைப்படுகிறது.

ஒரு சூழ்நிலையில் இணையசேவை இல்லாமல் எப்படி  பணம் அனுப்பலாம் பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் பயன்படுத்தும் போனில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), வாட்ஸ்அப் பே (WhatsApp Pay), பேட்டியம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்ஸ் (UPI Apps) இருக்கிறது.

இதன் மூலமாக தான் நாம் ஆத்திர அவசரத்துக்கு பணத்தை பரிமாறிக் கொள்கிறோம்.

RBI-இயக்கப்பட்ட UPI 2.0 என்பது வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக ஃப்யூச்சர் போன் பயனர்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி

இதற்காக நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து *99# என்று எண்ணை டைப் செய்ய வேண்டும். இந்த சேவைக்கு Unstructured Supplementary Service Data என்று அர்த்தம். இதன் வாயிலாக நீங்கள் இணைய சேவை இல்லாமல் ஒருவருக்கு பணத்தை அனுப்ப முடியும். பணம் அனுப்புவது மட்டுமின்றி வங்கி பேலன்ஸை கூட இதில் நாம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இதன் மூலமாக நாடு முழுக்க இருக்கும் 83 முன்னணி வங்கிகளின் சேவையை  பெறலாம்.

Also Read: கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி!

முதலில் உங்கள் மொபைலில் *99# டயல் செய்யுங்கள். இதையடுத்து பணத்தை அனுப்ப 1ஐ Type செய்து, தேவையான ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இதையடுத்து அனுப்ப வேண்டிய நபரின் யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு எண்ணை டைப் செய்து கொள்ளவும். அதன்பிறகு கடைசியாக யுபிஐ பின்னை டைப் செய்யவும். மேலும் இதன் மூலம் பரிவர்த்தனை செய்ய ரூ 0.50 செலுத்த வேண்டும்.. இதன் மூலம் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ 5,000 வரை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. upi payments

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *