வாட்சப் வெப்பை பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்வது எப்படி: இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாத ஆட்களை பார்க்கவே முடியாது. அந்த வாட்ஸப் மூலமாக நம்முடைய தகவலை மற்றவர்களுக்கு ஈசியாக அனுப்ப முடிகிறது.
தகவல் மட்டுமின்றி போட்டோ, வீடியோ என அனைத்தையும் அனுப்பி கொள்ளலாம். மேலும் வாட்ஸப்பை எப்படி பாதுகாப்பது குறித்து உங்களுக்கு ஒரு கேள்வி வரும். அதை எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
வாட்சப் வெப்பை பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்வது எப்படி
- முதலில் web.whatsapp.com டைப் செய்து அதிகாரப்பூர்வ WhatsApp இணைய டொமைனுக்குச் செல்ல வேண்டும்.
- இதனை தொடர்ந்து மொபைலில் whatsapp- யை திறந்து, கீழ் பக்கம் வலது மூலையில் உள்ள ‘அமைப்புகள்’ ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன்பின்னர் துணை மெனுவில் இணைக்கப்பட்ட சாதனங்கள் என்பதைத் தட்டவும்.
- அடுத்து, ‘லிங்க் ஏ டிவைஸ்’ விருப்பத்தைத் கிளிக் செய்து, உள்நுழைய, உங்கள் ஃபோனுடன் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
- மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
- அப்போது துணைமெனு திறக்கும், பின்பு ‘அமைப்புகள்’ என்பதை க்ளிக் செய்த, பின்னர் ‘தனியுரிமை’ என்பதைத் தட்டவும்.
- ‘ஸ்கிரீன் லாக்’ விருப்பத்தைப் பார்க்கும் வரை திரையில் கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்
- ஒரு தேர்வு பெட்டி விருப்பம் தோன்றும்; அதை தட்டவும்.
- பின்னர் 6 அல்லது அதற்கு மேற்பட்ட எண்கள் கொண்ட கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இதையடுத்து கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட்டு சரி என்பதைத் தட்டுவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
- 1 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஆட்டோ-லாக்கிற்கான நேரத்தை தேர்வு செய்யவும்.
- உங்கள் வாட்ஸ்அப் இணையத் திரை இப்போது பூட்டப்படும்.
Also Read: தினதோறும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா