உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதை செய்யுங்கள்!உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதை செய்யுங்கள்!

உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா: இப்போது இருக்கும் பல பிரச்சனைகளில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருவது தலையில் பேன் இருப்பது தான். இது குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு தான் இருக்கிறது. எனவே அந்த பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெளிவாக பார்க்கலாம்.

நம் தலையில் காணப்படும் பேன் மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவைகளில் ஒன்று. தெளிவாக செல்ல போனால் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 2000 முட்டைகள் இடும். இதனால் நம் தலையிலும், உடம்பிலும் வேகமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

குறிப்பாக ஆண்களை விட பெண்களின் தலையில் தான் பேன் வேகமாக முட்டையிடும். அப்படி பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சிலர் சாம்பு உள்ளிட்ட கெமிக்கல் கலந்த பொருட்களை தலைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பேன் சாகுமா என்றால் கிடையாது. அதற்கு மாறாக ஆண்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மொட்டை அடிக்க வேண்டும் அல்லது முடியை ஒட்ட வெட்டி விட வேண்டும். அதே போல் பெண்கள் கற்றாழையை பயன்படுத்தலாம்.

மேலும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தனித்தனி சீப்புகளை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் ஒரு முறை சீவிய சீப்பை பயன்படுத்தினால் அதில் அதிக அழுக்குகள் இருக்கும். அதனால் அழுக்குகளை கழுவி நீக்கிவிட வேண்டும்.
 
அதுமட்டுமின்றி குடும்பத்தில் இருக்கும் அனைவரும்  தனித்தனி தலையணைகளை பயன்படுத்த வேண்டும். அப்படி நாம் பயன்படுத்தும் தலையணை உறையை தினதோறும் வெந்நீரில் போட்டு சுத்தப்படுத்த வேண்டும்.

Also Read: காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

மேலும் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். அதனுடன் சேர்த்து பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்.

அல்லது தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி அதில் சிறிதளவு வேப்பிலை சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடித்த எண்ணெய்யை  தலைக்கு தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *