கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலினால் நோய்களும் ஆங்காங்கே உருவாகி வருகிறது. இதனால் சில இறப்புகளும் நேரிடுகிறது. இந்நிலையில் இந்த வெயிலின் தாக்குதலில் இருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடிப்பேன் என்று இல்லாமல், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
- மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
- வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும்.
- கதர் ஆடைகளை அணியாமல், லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்
- திடீரென மயக்கம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நிலை குன்றி காணப்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- மேலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, மோர், சர்க்கரை-உப்பு கரைசல், லஸ்ஸி, எலுமிச்சை தண்ணீர், வடிகஞ்சி போன்றவைகளை பருக வேண்டும்.
- குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.
- வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கலாம்.
- வீட்டுக்கு வெளியில் நிற்கும் வாகனங்களில் குழந்தைகளை உட்கார வைக்க வேண்டாம்.