ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் !ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் HP லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது என த்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் HP நிறுவனத்தின் லேப்டாப் தொழிற்சாலை அமைய உள்ளது என மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சுமார் 3 ஆயிரத்து 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த HP லேப்டாப் தொழிற்சாலை அமைய உள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தற்போதுவரை இந்தியா முழுவதும் உள்ள மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். HP laptop manufacturing factory in Sriperumbudur tamilnadu

இதனை தொடர்ந்து கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான HP நிறுவனம் தமிழகத்தில் விரைவில் தனது உற்பத்தியைத் தொடங்குகிறது.

அந்த வகையில் இந்த உற்பத்தி ஆலையில் கணினி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தொழிற்சாலையானது உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அமைய உள்ளது. அத்துடன் மின்னணு உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும்,

HP நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது. இதனையடுத்து இந்த தொழிற்சாலையின் வருகையால் சுமார் 1,500 பேர் முதற்கட்டமாக வேலைவாய்ப்பு பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதே நேரம் இங்கு உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும், வரும் பிப்ரவரி மாதம் முதல் லேப்டாப் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் வளர்ந்து வரும் தமிழகம் ஏற்றுமதியிலும் தற்போது முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *