
HUID ஹால்மார்க் தங்கம். தங்க நகை வாங்கும்போது 91.6 ஹால் மார்க் போன்ற பல முத்திரைகள் இருந்தால் தான் அது நல்ல தங்கம். அனால் அந்த முத்திரை போலியா உண்மையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது. வாங்க பாக்கலாம்.
HUID ஹால்மார்க் தங்கம்
ஹால்மார்க் முத்திரை (HUID)என்றால் என்ன?
HUID -Hallmark Unique Identification ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் என்பது 4 முதல் 6 இலக்க எண்களை கொண்ட ஒரு குறியீடு ஆகும். நாம் வாங்கும் ஒவ்வரு தங்க பொருட்களிலும் இந்த குறியீடு கட்டாயம் இருக்க வேண்டும். முதலில் 4 இலக்கங்ககளை கொண்ட குறியீடு ஏப்ரல் 1 முதல் 6 இலக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.
HUID ன் மூன்று வகைகள்:
1.22K916 (என்பது)-22 காரட் தங்கம் ,91.6% தங்கம் இருக்கும்
2.18K750 (என்பது)-18 காரட் தங்கம் ,75.0% தங்கம் இருக்கும்
3.14K585 (என்பது)-14 காரட் தங்கம் ,58.5% தங்கம் இருக்கும்
ஏன் இந்த குறியீடு?
இது தங்கநகைகளின் பின் புறத்தில் குறிக்கப்படும் 6இலக்க எண் ஆகும். இந்த எண்கள் தங்கத்தினை ஹால்மார்க் செய்யும் போது ஒவ்வரு தங்க நகைகளை தனித்தனியே அடையாளம் கண்டறிய குறிக்கப்படுகின்றது. Assaying & Hallmark Center ல் கைகளை கொண்டு HUID எண்கள் முத்திரையாக பாதிக்கப்படுகின்றது. போலி தங்க நகைகள் விற்பனை செய்வதை தடுக்க ஒவ்வரு நகை கடைக்கும் HUID 6 இலக்க எண்கள் வழங்கப்படும்.
1.HUID நகைகளை தனித்தனியே அடையாளம் கண்டறிய பயன்படுகின்றது.
2.தங்கத்தின் நம்பக தன்மையை அறியலாம்.
3.நகைகளின் தூய்மையை உறுதி செய்கின்றது.
CSC Aadhaar UCL Registration 2024 ! ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி?
Hallmark (ஹால்மார்க்) ?:
தங்க பொருட்களில் ஹால்மார்க் பொறிக்கப்படுவது என்பது தங்கத்திற்க்கு அடையாளமாகவும், தங்கத்தின் தூய்மையையும் குறிக்கும் விதமாக இருக்கின்றது. BIS அங்கீகரிக்கபப்ட்ட நிறுவனத்தின் மூலம் தங்கம் ஹால்மார்க் முத்திரை குறிக்கப்படுகின்றது. நாம் எந்த தங்க பொருட்கள் வாங்கினாலும் ஏமாற்றப்படாமல் இருக்க ஹால்மார்க் குறியீடு இருக்கின்றதா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும்.
ஹால்மார்க் குறியீடு நாம் தெரிந்து கொள்வது எப்படி?:
BIS ஹால்மார்க் மூன்று முறைகளில் இருக்கும்.
1.BIS சின்னம்
2.தங்கத்தின் தூய்மை மற்றும் நம்பகத் தன்மை
3.HUID குறியீடு
இவைகள் மூலம் நாம் வாங்கும் தங்கத்தின் மதிப்பினை அறிந்து கொள்ளலாம்.
ஹால்மார்க் செய்வதின் பயன் :
1.பொருளின் தரம் கண்டறியப்படுகின்றது.
2.நகையை விற்கும் பொது அன்றைய விலைக்கே விற்க முடியும்.
3.வங்கிகளில் நகை கடன் எளிதில் பேற முடியும்.
முத்திரையை சரிபார்ப்பது எப்படி?:
நாம் வாங்கும் நகைகள் தரமானது என கடைகளில் கூறினாலும் நம் மனதில் பல குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த குழப்பங்களை தவிர்க்க மத்திய நுகர்வோர் மற்றும் உணவு அமைச்சகத்தின் மூலம் BISCARE APP என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி ஜூலை 1 -2021 முதல் செயல்படுத்தப்டுகின்றது. இந்த செயலியை மக்கள் பயன்படுத்தி தங்கத்தின் தரத்தினை மற்றும் போலி முத்திரையை அறிய முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நாம் வாங்கிய தங்கத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதையும் தெரியப்படுத்தி தீர்வினை பெறலாம்.