உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி எப்போது? எங்கே? வெளியான முக்கிய அறிவிப்பு!  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி எப்போது? எங்கே? வெளியான முக்கிய அறிவிப்பு!  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு பிறகு அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேதியை ஐசிசி தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025

அதாவது  இங்கிலாந்தில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை நடைபெற இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு லார்ட்ஸ் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் கடந்த 2023ல்  ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

மேலும் உலக தரவரிசையில் முதல் 2 இடத்தை பிடிக்கும் டீம் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவார்கள்.

அதன்படி  தற்போதைய தரவரிசை பட்டியலின்படி முதல் இடத்தில் இந்தியா அணியும் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும் உள்ளது.

Also Read: எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு- என்னோட அப்பா ஒரு மெண்டல் – யுவராஜ் சிங் சாடல்!!

இதையடுத்து நியூசிலாந்து 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும் உள்ளது. 5வது இடத்தில் இலங்கை அணியும்,  6வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும், வங்கதேசம் 7 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 58 ஆட்டங்களில் விளையாடி அதில் 29 போட்டிகளில் வெற்றி கண்டு அதிக வெற்றிகளை கண்ட அணி என சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. world test championship 2025

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *