
தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET CRICKET NEWS
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் :
தற்போது 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
மேலும் இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு :
இதனையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி அங்கு செல்ல மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இந்த யோசனையை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் தற்போது போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது – IIBF அமைப்பு அறிவிப்பு !
பாகிஸ்தானுக்கு ICC வார்னிங் :
சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு ICC எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுப்பதால் ஹைப்ரிட் மாடலில் போட்டியை நடத்துவது குறித்து ICC கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாகிஸ்தான் அதற்க்கு பதிலளிக்க வில்லை. இதனையடுத்து ஹைப்ரிட் மாடலை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது.
தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது.
சமீபத்திய செய்திகள் :
தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!!
சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் – முழு விவரம் இதோ !
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !
இன்று பிற்பகல் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க 3 நிமிடம் தான் – அதுக்கு மேல பண்ணா அபராதம்!
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!