அடிலெய்ட் பகுதியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி -யில் ஹெட்டுக்கு எதிராக ஆக்ரோஷ உரையாடிய இந்திய வீரர் சிராஜ்க்கு ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி: சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் 180 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, மைதானத்துக்குள் இறங்கிய ஆஸ்திரேலியா அணி மொத்தம் 337 ரன்களை குவித்தது. அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள் தான் என்று ஆனது. இதனால் ஆஸ்திரேலியா சுலபமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ்.
அந்த சமயம், அவர்கள் இருவரும் மாறி மாறி ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதம் செய்தனர். இதனால் மைதானத்தில் சூடான சூழ்நிலை உண்டாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தங்களுடைய தரப்பு நியாத்தை வெளியீட்டு வந்தனர். இந்நிலையில், ஐசிசி இருவருக்கும் ஒழுங்கு நடவடிக்கையாக அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர்களது சம்பளத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் – முழு தகவல் இதோ !
டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!