ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை வெளியான நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வேகபந்து வீச்சாளர் பும்ரா அஸ்வின் சாதனையை சமன் செய்த தாக தகவல் வெளியாகியுள்ளது.
ICC Test Bowlers Ranking:
மெர்ல்பர்னில் நாளை பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. மேலும் நாளை நடக்க இருக்கும் போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங்கே இறங்க இருக்கிறார். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா.., ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை இதோ!!
இதில் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தான் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரிட் பும்ரா முதல் முறையாக 900 க்கும் அதிகமான ரேட்டிங் புள்ளிகளை பெற்று பட்டையை கிளப்பியுள்ளார்.
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
அதன்படி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தரவரிசை ரேட்டிங் புள்ளிகளில் 900க்கும் மேல் புள்ளிகள் எடுத்த 2வது பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். அப்ப முதலாவது பவுலர் யார் என்று உங்களுக்கு கேள்வி வரும். அது வேற யாரும் இல்லை, தமிழ் நாட்டை சேர்ந்த அஸ்வின் தான். இவர் 904 ரேட்டிங் புள்ளிகளை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா சமன் செய்துள்ளார். அதாவது, ஐசிசி தரவரிசையில் 904 ரேட்டிங் புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?