இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் கீழ் 1964ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் இந்தியா முழுவதும் பல்வேறு இளநிலை உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பக்கட்டணம் , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் கீழே அறிந்து கொள்வோம்.
நிறுவனத்தின் பெயர் :
IDBI – இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் இந்தியா முழுவதும் காலிப்பணியிடம் இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இளநிலை உதவி மேலாளர் பணியிடங்கள் இந்தியாவில் இருக்கும் பல வங்கிகளில் காலியாக இருப்பதாக IDBI வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி துறையில் வேலை 2023 ! உடனே விண்ணப்பிக்கலாம் !
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
இந்தியா முழுவதும் இருக்கும் இந்த வங்கியில் சுமார் 600 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
20 முதல் 25 வயதிற்குள் இருக்கும் பட்டதாரிகள் IDBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
1. SC / ST – 5 ஆண்டுகள்
2. OBC – 3 ஆண்டுகள்
3. குறைபாடுகள் உள்ள நபர்கள் – 10 ஆண்டுகள்
4. முன்னாள் ராணுவத்தினர் – 5 ஆண்டுகள் வரையில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் :
1. பயிற்சி காலம் – மாதம் ரூ. 5,000
2. இன்டர்ன்ஷிப் காலம் – மாதம் ரூ. 15,000
3. இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு பின் PGDBF முடித்த பின் – மாதம் ரூ. 6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரையில் ஊதியமாக வழங்கப்படும்.
அனுபவம் :
இந்த வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுபவம் தேவை கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
15.09.2023ம் தேதியில் இருந்து 30.09.2023 வரையில் இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் IDBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
1. IDBI வங்கியில் முன்னதாக ஏதேனும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் பதிவு எண் , கடவுச்சொல் பதிவு செய்து இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
2. முதன் முதலில் IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் நியூ ரிஜிஸ்ட்ரேஸின் கிளிக் செய்ய வேண்டும்.
3. பின்னர் பெயர் , மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியாக பதிவு செய்து Save&Next கொடுக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றி Save & Next கிளிக் செய்ய வேண்டும்.
5. பின்னர் கல்வி விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
6. அடுத்ததாக நாம் டைப் செய்து இருக்கும் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்த பின் Save & Next கொடுக்க வேண்டும்.
7. சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
8. பின்னர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்படிவத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
1. SC / ST / PWD – ரூ. 200
2. மற்ற பிரிவினர்கள் – ரூ. 1,000 என விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
IDBI வங்கியில் காலியாக இருக்கும் இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
ஆன்லைன் தேர்வு நாள் :
20.10.2023 அன்று மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வானது நடைபெறும்.
தேர்வு வழிமுறைகள் :
200 மதிப்பெண்களுக்கு 2மணி நேரம் ஆன்லைன் தேர்வானது நடத்தப்படும்.
1. லாஜிக்கல் ரீசனிங் , டேட்டா அனலிஸ் & விளக்கம் – 60 மதிப்பெண்கள்
2. ஆங்கிலம் – 40 மதிப்பெண்கள்
3. அளவு தகுதி – 40 மதிப்பெண்கள்
4. பொது / விழிப்புணர்வு / வங்கி விழிப்புணர்வு – 60 மதிப்பெண்களுக்கு தேர்வானது நடத்தப்படும்.