இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

இந்தியாவில் இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை: நாடு முழுவதும் உள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. இந்த பக்கம் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் விதமாக சுங்கச்சாவடிகளை இயக்கி வருகிறது. சுங்கச்சாவடி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு இலவசம். அதே போல் மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், எட்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சில வழித்தடங்களில் சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வருவதாகவும், அதற்கு சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து பல சுங்கச்சாவடிகளை அமைத்து வசூலிப்பதும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி “செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து கட்டணம் வசூலிக்கும் திட்டம்” தொடர்பாக சா்வதேச பயிலரங்கு டெல்லியில் நேற்று (26.06.2024) நடந்த கூட்டத்தில் சுங்க வரி கட்டணம் வசூலிப்பது  குறித்து புதிய நெறிமுறைகளை குறித்து பேசியுள்ளார்.

Also Read : புகைப்பிடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல் – போட்டோ வைரல்!

அதில் அவர் பேசியதாவது, ” நடப்பு நிதியாண்டில் 5,000 கி.மீ. தொலைவுள்ள சாலைகளில் செயற்கைக்கோள் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்.  இனிமேல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும்.  மேலும் சாலைகளில்  பராமரிப்பில்லாத, மோசமாக உள்ள வழித்தடங்களில் இருக்கும் சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே இப்படி குண்டும், குழியுமாக சாலையை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க நினைத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். indian news – national india news in tamil – Breaking news – union minister – nitin gadkari – toll latest news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *