IIT Madras Recruitment 2024. இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் தமிழ்நாடு, சென்னையில் அமைந்துள்ள ஒரு பொது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் எமினன்ஸ் எட்டு பொது நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது ஐஐடி மெட்ராஸில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர், எண்ணிக்கை, சம்பளம் ஆகியவற்றை கீழே காணலாம்.
iit madras recruitment 2024 non teaching staff 64 vacancy
பல்கலைக்கழத்தின் பெயர்:
இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IIT Madras)
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தலைமை பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer) – 1
உதவிப் பதிவாளர் (Assistant Registrar ) – 2
விளையாட்டு அதிகாரி (Sports Officer) – 1
இளநிலை கண்காணிப்பாளர் (Junior Superintendent) – 9
உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer) – 4
உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (Physical Training Instructor) – 3
இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 30
சமையற்காரர் (Cook) – 2
ஓட்டுனர் (Driver) – 2
பாதுகாவலர் (Security Guard) – 10
மொத்த காலிப்பணியிடங்கள் – 64
கல்வித்தகுதி:
தலைமை பாதுகாப்பு அதிகாரி – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 15 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
உதவிப் பதிவாளர் – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
விளையாட்டு அதிகாரி – குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் உடற்கல்வி / விளையாட்டு அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் இருக்கவேண்டும்.
இளநிலை கண்காணிப்பாளர் – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கலை/அறிவியல் அல்லது மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 6 வருட நிர்வாக அனுபவம் இருக்கவேண்டும்.
உதவி பாதுகாப்பு அதிகாரி – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் இராணுவம்/காவல்துறை/NCC/தீயணைப்பு பயிற்சி மற்றும்; 6 வருட பொருத்தமான அனுபவம் இருக்கவேண்டும்.
உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் உடற்கல்வி இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் தொடர்புடைய 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
REPCO Bank appraiser recruitment 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இளநிலை உதவியாளர் – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கலை/அறிவியல்/வணிகம் அல்லது மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சமையற்காரர் – 60% மதிப்பெண்களுடன் ஹோட்டல் மேலாண்மை/கேட்டரிங் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
ஓட்டுனர் – 10 அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் இலகுரக மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பேட்ஜ் உடன், 2 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பாதுகாவலர் – 10ஆம் தேர்ச்சியுடன் உடல் தகுதி தரநிலைகள், NCC சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 27,32,45,50 என பதவிக்கு ஏற்றாற்போல் தெரிவிக்கபட்டுள்ளது.
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
சம்பளம்:
தலைமை பாதுகாப்பு அதிகாரி – பே மேட்ரிக்ஸ் நிலை 12ன் படி
உதவிப் பதிவாளர், விளையாட்டு அதிகாரி – பே மேட்ரிக்ஸ் நிலை 10ன் படி
இளநிலை கண்காணிப்பாளர், உதவி பாதுகாப்பு அதிகாரி, உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் –
பே மேட்ரிக்ஸ் நிலை 6ன் படி
இளநிலை உதவியாளர், சமையற்காரர், ஓட்டுனர் – பே மேட்ரிக்ஸ் நிலை 3ன் படி
பாதுகாவலர் – பே மேட்ரிக்ஸ் நிலை 1ன் படி
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 10.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 12.03.2024
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwD மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
மற்ற பிரிவினருக்கு – ரூ.500/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து மற்றும் திறன் தேர்வு, மேலும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.