சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் கைதி, லியோ, விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டது. சில நாட்களுக்கு முன் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா சன் பிக்சர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சன் பிக்சர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா :
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா சன் பிக்சர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டி மாயம் – உறவினர் போட்ட அதிர்ச்சி ட்வீட் – சென்னையில் பரபரப்பு!!
கூலி படத்தின் டீசரில் இடம் பெற்ற “வா வா பக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது பாடலின் இசையை டீசரில் நீக்க வேண்டும் என்று சன் பிக்சர் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.