Home » செய்திகள் » தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Breaking News: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும்.

அதன்படி நெல்லை, கோவை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட  13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. India Meteorological Department

Also Read: விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் – டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு – என்ன காரணம் தெரியுமா?

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதுமட்டுமின்றி கடலோர பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் உள்ள கடலில் சூறாவளி வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. weather report today

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top