தமிழகத்தில் செப் 8 வரை இங்கெல்லாம் மழை: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் செப் 8 வரை இங்கெல்லாம் மழை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் வருகிற செப்டம்பர் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.
Also Read: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது – எதற்கு தெரியுமா?
மேலும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே அடுத்த ஏழு நாட்களுக்கு சூறாவளி காற்று அதிகமாக வீசக் கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை