தமிழ்நாட்டில் நாளை (10.04.2025) மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – சற்று முன் வந்த செய்தி
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பம் அதிகரித்து வருவது தெரிந்த ஒன்று. அதுவும் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த காரணத்தால் ஏசீ, காத்தாடி, போன்ற மின்சாதனங்கள் இல்லாமல் மக்களால் ஒரு மணி நேரம் கூட தாண்ட முடியவில்லை.
அதனால், தமிழகத்தில் கடந்த வாரங்களில் மக்களின் மின் தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்தாலும் தடை இல்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது மின்சாரத்துறை. ஆனால் அதில் தற்போது, ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு பகுதிகளிலும் முழு நேரம் மின் வெட்டு ஏற்படவில்லை. அதாவது, மின் பாதைகளில் தேவை இல்லாத பழுது ஏற்படாமல் இருக்க மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அப்படி, பழுதுகளை நீக்கும் நேரத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும், நமது வீட்டு மின் சாதன பொருட்களை பாதுகாக்கவும் அன்று காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்தடை செய்யப்படும். இந்த பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையங்கள் வாரியாக மாதத்தின் ஒவ்வரு நாளும் வேறு வேறு பகுதிகளில் நடைபெறும்.
Also Read: Today Rain Update – இன்றைய வானிலை அறிக்கை..! 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இந்த பராமரிப்பு நடைபெறாததற்கு முக்கிய காரணமாக, பள்ளி ஆண்டு பொது தேர்வு உள்ளது. தேர்வு நேரத்தில் முழு நேரம் மின் தடை செய்தால் அது மாணவர்களை மனதளவில் சோர்வை ஏற்படுத்தும். அதனால், இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், நாளை (10.04.2025) வியாழக்கிழமை தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் மின்தடை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது தமிழக மக்களுக்கு மனதில் குளிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. மேலும், மின்தடை குறித்த அறிவிப்பு ஏதும் இருந்தால், நாங்கள் எங்கள் தளத்தில் உடனடியாக பதிவிடுவோம்.
இது போன்ற மின்தடை செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள் போன்றவற்றை உடனடியாக பெற எங்கள் வாட்ஸாப்ப் சானலில் இனைந்து பயன்பெறுங்கள்.