17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் | X – Ray ரிப்போர்ட் பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்!!
லக்னோவை சேர்ந்த சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு 2008 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. ஷி மெடிக்கல் கேர்’ நர்சிங் ஹோமில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் அவர் அந்த குழந்தை பெற்றுக்கொண்டார்.
அதன் பின் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எப்போதெல்லாம் வயிறு வலி வருகிறதோ அப்போது அவர் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்து கொண்டுள்ளார். பல்வேறு மருத்துவமனைக்கு சென்று பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றும் அவரது வயிற்று வலிக்கு தீர்வு கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இது தொடர்ந்து உள்ளது. சமீபத்தில் வலி நிவாரணி எடுத்தும் அவருக்கு தாங்க முடியாத அளவில் வயிறு வலி இருந்து உள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனை சென்று உள்ளார்.
Also Read:மியான்மர் நிலநடுக்கம் 2025.., பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு.., 1600 பேர் படுகாயம்!!
இந்த நிலையில் லக்னோ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சந்தியா பாண்டேக்கு X – Ray எடுக்கப்பட்டது. அப்போது வந்த ரிப்போர்ட்டை பாத்து மருத்துவர்கள் மிரண்டு விட்டனர். ஆம் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருந்துள்ளது.
அதன் பின் அவர் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (KGMU) சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த மார்ச் 26 அறுவை சிகிச்சை மூலம் அந்த கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த செய்தியை கிங் ஜார்ஜ் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
தற்போது சந்தியா பாண்டே உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது கணவர் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் X – Ray மூலம் கண்டு அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் இது போன்ற சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. சந்தியா பாண்டேக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை காவல் துறை விசாரிக்க உள்ளனர்.