ராமர் கோவில் திறப்பு.., இந்திய அணி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு அழைப்பு.., முக்கிய போட்டோ வெளியீடு!!ராமர் கோவில் திறப்பு.., இந்திய அணி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு அழைப்பு.., முக்கிய போட்டோ வெளியீடு!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வருகிற ஜனவரி 22ம் தேதி படுபிரம்மாண்டமாக திறக்கப்பட இருக்கிறது. இந்த திறப்பு விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏகப்பட்ட முக்கிய பிரமுகர்கள் கோவில் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவரான சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *