நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!!
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களின் ஓட்டுக்களை பெற வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வருமான வரித்துறை பணப்பட்டுவாடா தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அந்த தொகுதியில் வாக்குகளை சேகரிப்பதற்காக புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதாவது கிட்டத்தட்ட 5 பேர் கொண்ட வரித்துறையினர் நேற்று சரியாக மாலை 6.30 மணியளவில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று மதியம் 3 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்து தொல்.திருமாவளவன், ” எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.