பணப்பட்டுவாடா விவகாரம்  - தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு - எந்தெந்த ஊர்களில் தெரியுமா?பணப்பட்டுவாடா விவகாரம்  - தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஐடி ரெய்டு - எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் கிட்டத்தட்ட 44 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இதற்கு முன்னரே அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தீவிர பிரச்சாரத்திலும் முழுவீச்சாக இறங்கியுள்ளனர். இது ஒரு பக்கம் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சொல்லப்போனால் முக்கிய அரசியல்வாதிகள் வீட்டில் ரெய்டு விட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்ளிட்ட  44 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 8 முன்னணி அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு தொடர்புடைய தொழில் ரீதியான அலுவலகங்கள், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அரசின் குடிநீர் வழங்கல் வாரியம் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, திருநெல்வேலியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது பணம் சிக்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

RCB-க்கு எதிராக வெற்றியை தொடருமா RR  – வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *