மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பும்ரா:
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, , பிரிஸ்பேன் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி, மொத்தம் 445 ரன்களை எடுத்திருந்தது.
பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை – பகிரங்க மன்னிப்பு கோரினார்!!
இதில் டிராவிஸ் ஹெட்(152) மற்றும் ஸ்டீவ் ஸ்மித்(101) இருவரும் சதத்தை விளாசினார். மேலும் இந்த போட்டியில் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 51 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ மற்றும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஈஷா குகாவும் சேர்ந்து வர்ணனை செய்து வந்தனர்.
4.67 கோடி TAX கட்டிய குகேஷ் – வெளியான ஷாக்கிங் தகவல்!!
அந்த நேரத்தில் இருவரும் பும்ராவை பாராட்டி பேசினார். அதன்படி, பிரெட் லீ, “Most valuable player” என்று கூறினார். ஈஷா குகா பேசுகையில், “most valuable Primate” (மிகவும் மதிப்புமிக்க பிரைமேட்) என்று கூறினார். “பிரைமட்” என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த ஒரு உயிரினத்தை குறிக்கும். இதற்கு பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தொலைக்காட்சி நேரலையில் மன்னிப்பு கேட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை