மெல்போர்னில் இன்று நடைபெற்ற IND vs AUS 4வது டெஸ்ட் போட்டி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 311 ரன்கள் குவித்துள்ளது.
TEST MATCH:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டி வென்றுள்ளது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் நான்காவது போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி.., முதல் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி!!
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கவாஜா அதிரடியாக விளையாடி வந்தனர். இதில், கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமின்றி பும்ரா பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தெறிக்க விட்டார். இதையடுத்து, கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?
அதன் பிறகு அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தது. இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது.
மேலும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!