இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் என்ற இடத்தில் இன்று காலை அதிரடியாக தொடங்கியது. மேலும் முதன் முறையாக இந்திய அணிக்கு பும்ரா கேப்டன்சி செய்து வருகிறார். இதனை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024 – மதிய உணவு இடைவேளைக்குள் INDIA 4 விக்கெட்!
ஆனால் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் மின்றி ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து களத்தில் இறங்கிய தேவ்தத் படிக்கல் கிட்டத்தட்ட 23 பந்துகள் விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார். அடுத்து வந்த கிங் விராட் கோலி 12 பந்துகளை சந்தித்து வெறும் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். ஆனால் ஓப்பனிங்கில் இருந்து ஆடி வரும் கே.எல். ராகுல் ஒருபக்கம் விக்கெட்டை இழக்காமல் தாக்குப்பிடித்து விளையாடினார்.
விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர் – அதுவும் இந்த முக்கிய பதவியா?
இருந்தாலும் 74 பந்துகளை சந்தித்து வெறும் 26 ரன்கள் எடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து உள்ளே வந்த ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதனால் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல்
இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி?
அரசு ஊழியர்களின் retirement age உயர்வு?
Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?