நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இன்று காலை பூனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது.
நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து டெவான் கான்வே அரைசதம் அடித்து 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விளாசிய ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம் – தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
அதன் பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க முதல் இன்னிங்ஸில் வெறும் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் இந்தியா சார்பில் பவுலிங் போட்ட வாஷிங்டன் சுந்தர் கிட்டத்தட்ட ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மட்டுமின்றி ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்