இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் நாளை கடைசி கட்டமான 7 ஆம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. இதையடுத்தது வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் இது குறித்து ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்தியா கூட்டணி :
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை (1 ஆம் தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 28 கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.