Home » செய்திகள் » இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

புகழ் பெற்ற செஸ் போட்டியில் திறமையானவர்களாக இருக்கும் இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024 குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

செஸ் போட்டி:

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக வீரர் குகேஷ் (Gukesh) நேற்று வென்றுள்ளார். அதாவது, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை, 18 வயதான குகேஷ் எதிர்த்துப் போட்டியிட்டார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகளில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர்.

மற்ற எல்லா சுற்றுகளும் டிராவில் முடிந்தது. நேற்று 14வது சுற்று விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது. மேலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றில், 58-வது நகர்த்தலில் டிங் லிரேனை  வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். இவர் ஒரு தமிழன் என்பதால் அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள கிராண்ட் மாஸ்டர் களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் 31 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தமிழ்நாடு – 31
  • மேற்கு வங்கம் – 11
  • மஹாராஷ்டிரா – 12
  • தில்லி – 6
  • ஆந்திர பிரதேசம் – 4
  • குஜராத் – 2
  • கேரளா – 3
  • ஹரியாணா – 1
  • கோவா – 2
  • ஒடிஸா – 2
  • கர்நாடகா – 4
  • தெலங்கானா – 6
  • ராஜஸ்தான் – 1

 உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top