
தற்போது அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமெரிக்கா மத சுதந்திர அறிக்கை :
அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைதாக்குதல் அதிகரிப்பதாகவும், மேலும் மாத மாற்ற எதிர்ப்பு சட்டங்கள், வெறுப்புப் பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தை சேர்தவர்களின் வீடுகள், வழிபாட்டு தலங்கள் இடிப்புகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – தீவிரம் காட்டும் மீட்பு படையினர்!!
இந்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள இந்தியா மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைபட்சமானது என்றும் இந்தியாவில் மத, சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.