பும்ராவை தொடர்ந்து மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் விராட் கோலி, ரோஹித் சர்மா தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். டெஸ்ட் போட்டி ஆரம்பித்ததில் இருந்து இருவரும் மோசமாக விளையாடினர். அதனாலேயே கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை விலக்கி, பும்ராவை கேப்டனாக ஆக்கினார்கள்.
இதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்க படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இந்திய அணி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ” சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோகித் சர்மா தன்னுடைய ஃபார்மை கண்டறிந்தால் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி.., ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
அதிலும் அவர் சிறப்பாக ஆடவில்லை என்றால், பும்ரா தான் கேப்டனாக இருப்பார். மேலும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என நினைக்கிறேன். அப்படி அவர் அறிவித்தால் முழு நேர இந்திய அணியின் கேப்டனாக பும்ரா இருக்க கூடும். ஆனால், அவரால் அப்படி கேப்டனாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவரால் இருக்க முடியாத பட்சத்தில் மீண்டும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?