இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, பெர்த்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் போது பீச் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதனால் இந்தியா 150 ரன்களையும், ஆஸ்திரேலியா 104 ரன்களையும் தான் அடித்தன.
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி!
இதையடுத்து இரண்டாவது நாளில் பீச் பேட்ஸ்மேன்களுக்கு அமைய, இந்திய அணி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டினார். அதன்படி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 (297), கே.எல்.ராகுல் 77 (176), விராட் கோலி 100 (143) ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இவர்களுடன் சேர்ந்து வாஷிங்டன் சுந்தர் 29 (94), நிதிஷ் ரெட்டி 38 (27) ஆகியோரும் ஓரளவுக்கு சிறப்பாக ரன்களை சேர்த்ததால், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 487/6 ரன்களை அடித்து, டிக்ளெர் அறிவித்தது.
TN Govt AABC Scheme: அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் மூலம் ரூ.1.5 கோடி பெறுவது எப்படி?
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
அதன்படி நாதன் மெக்ஸ்வீனி 0 (4), உஸ்மான் கவாஜா 4 (13), பாட் கம்மின்ஸ் 2 (8), மார்னஸ் லாபுசாக்னே 3 (5), ஸ்டீவன் ஸ்மித் 17 (60), டிராவிஸ் ஹெட் 89 (101), மிட்செல் மார்ஷ் 47 (67).
அலெக்ஸ் கேரி 36 (58), மிட்செல் ஸ்டார்க் 12 (36) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து மொத்தம் 238 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.
இதன் மூலம் இந்திய அணி தங்களது வெற்றியை பதிவு செய்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்